Captain Mayuan (Saba)

Captain Mayuan (Saba)

Sunday, May 24, 2015

மணலாறு உதயபீடம் முகாமில் தலைவருடன் கப்டன் மயூரன் (1987)


1987 இல் மணலாறு உதயபீடம் முகாமில்

நிற்பவர்கள் இடமிருந்து வலமாக
டேமியன்,  சயந்தன், தலைவர் பிரபாகரன் 

இருப்பவர்கள் இடமிருந்து வலமாக
லெப் கேணல் ரொபேர்ட் (அல்லது வெள்ளை),   ஈஸ்வரன் மாஸ்டர், கப்டன் மயூரன்,  லோலோ

Wednesday, May 20, 2015

Captain Mayuran (Saba) - Jacket Bodyguaurd






கப்டன் மயூரன் தலைவர் பிரபாகரனின் ஜாக்கெட் மெய்பாதுகாவலர்களில் (Jacket Bodyguard) ஒருவராக

Sunday, May 10, 2015

கப்டன் மயூரன் வீர வணக்கம்!

கப்டன் மயூரன்
(நவம்பர் 1, 1970- நவம்பர் 11, 1993)
மேலைப்புலோலியூர்
ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை

மயூரன் என்ற புனைபெயரைக் கொண்ட பாலசபாபதி தியாகராஜா தனது பதினோழாவது வயதில்,1987இல் விடுதலைப் போராட்டத்தில்இணைந்து கொண்டார். ஆறு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டார். நவம்பர் 11,1993 அன்று நடைபெற்ற பூநகரிப் பெருந்தளச் சமர், தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் வீரமரணமடைந்தார்.

கரும்புலியாய் செல்லவில்லை
கரும்புலி போல் ஆகிவிட்டீர்.

அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்
திண்ணம் கொண்டான் மயூரன்.

பருத்தித்துறை ஆத்தியடியில்
``````````````````````````````````````````````````````

பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.


15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.

அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே காட்லியின் கல்வியைக் கை விட்டு1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.


இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க… ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.


மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.


திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான். அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.


கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன்
ருக்கால் வந்தாய்
நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய்
தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க
கையில் பெடியோடு உனது அண்ணி
கண் கலங்கப் பார்த்திருக்க
பார்த்தாயா…யா? புரியவில்லை
நினைவில் தெரியவில்லை.
தெருவோடு நீ ஓடி
துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி
குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம்
கனவாக மறைந்து போனாய்
சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய்
எம் கண்ணிலெல்லாம் காயாத
நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய்.


இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ..? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும், வாங்கி வா என்று அனுப்பினான்.
பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்றபோது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள்.

ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகி விட்டான்.


மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது.

மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்

```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி
பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென
விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே
பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா
தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு
தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த
கதைகள் பல இங்கு காதில் அடிபடுது
ஆனாலும் மயூரா உன்
உடலைக் காணவில்லையடா
விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு
விதி எமக்கு இல்லையடா - அதனால்தான்
உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது
சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா
பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊ
ர்தியில்
கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம்
நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம்
மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம்
உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம்
உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம்


- தீட்சண்யன்

 
மயூரனின் நண்பர்களின் நினைவில்
```````````````````````````````````````````````````````````

களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையிpல்
கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டாய்
களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை
வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே
எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே
என்றுன்னை நினைக்க மாட்டோம்
எரியாகி எரிந்து விட்டாய்
எரிமலையாகி வெடித்து விட்டாய்
நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா!
உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை
உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே
உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே…
 


- நண்பர்கள்

மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)
``````````````````````````````````````````````````````````````````````````````

அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்) கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன்.


அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை..
என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார்.

 
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!


Quelle - tamilarinthagam.blogspot.de

Captain Mayuran (Balasabapathy Thiyagarajah)


Saturday, May 9, 2015

கப்டன் மயூரன்

கப்டன் மயூரன் (நவம்பர் 1, 1970 - நவம்பர் 11, 1993, மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை) என்ற புனைபெயரைக் கொண்ட பாலசபாபதி தியாகராஜா தனது பதினோழாவது வயதில், 1987 இல் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டார். ஆறு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டார். நவம்பர் 11, 1993 அன்று நடைபெற்ற பூநகரிப் பெருந்தளச் சமர், தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் வீரமரணமடைந்தார்.

குடும்பப் பின்னணி

மயூரன் தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் ஏழாவது புதல்வன். மயூரனின் தந்தை சபாபதிப்பிள்ளை. தியாகராஜா இலங்கையின் புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் பல வருடங்களாகக் கடமையாற்றியவர். அண்ணன் பிறேமராஜன் (தீட்சண்யன்). கவிஞர். ஆசிரியர். 1990 இல் நடைபெற்ற ´ஷெல்´ தாக்குதல் ஒன்றில் ஒரு காலையும், ஒரு கையின் செயற்பாட்டையும் இழந்தவர். புலிகளின் குரல் வானொலிக்கு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர். மே 13, 2000 இல் மரணித்து விட்டார். இன்னொரு அண்ணன் கப்டன் மொறிஸ் , 1984 இல் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து, விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராகப் பணியாற்றி, மே 1, 1989 இல் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் மண்ணுக்கு வித்தானவர்.

கல்வி

மயூரன் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும், ஹாட்லிக் கல்லூரியிலும் கற்றார்.

இணைந்த காலம்

ஜனவரி 1987 இல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்

இணையத் தூண்டிய நிகழ்வு

யாழ் மாவட்டப் பகுதியில் சிங்கள அரச இராணுவத்தின் கட்டு மீறிய அட்டூழியம். மற்றும் சகோதரான் கப்டன் மொறிஸ் இன் விடுதலை இயக்கப்பணிகளும், அவன் இணைந்து பணியாற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழின விடுதலை நோக்கும், அசைக்க முடியாத உறுதியும்.

ஆரம்பப் பணி

போராளிகளின் முல்லை நில (காடும் காடு சார்ந்த நிலமும்) வாழ்வுடனான போராட்டப் பயிற்சி.

இணைந்திருந்த பயிற்சிக் குழு

பணியாற்றிய குழு

'ஓ' குறூப் அல்லது 'சைவர்' குறூப்

போராட்ட காலம்

  • மயூரன் போராட்ட காலம் முழுவதும் விடுதலைப் புலிகளின் தலைவரின் அருகாமையிலேயே வாழ்ந்திருந்தார்.
  • விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்ப உறுப்பினர்களுடன் உறவாடி, விளையாடி, அதே நேரம் மண்ணிற்காய் போராடி வாழ்ந்தார். தலைவரின் குழந்தைகள் இவரால் அவ்வப்போது தாலாட்டி, உணவூட்டப்பட்ட கதைகளும் உண்டு. இவர் மென்மையான உள்ளம், தளராத மனவுறுதி, தன்னிகரற்ற துணிச்சல் கொண்டவர்.
  • 1988 காலப்பகுதியில் காடுகளில் வாழும் தமிழ் போராளிகளை அழிக்கும் நோக்கில் ஈழப்பகுதியில் காலடி வைத்திருந்த இந்திய இராணுவத்தினரின் தந்திரமான காடு வளைப்புத் தாக்குதல்களின் போதான எதிர்நடவடிக்கைத் தாக்குதல்களில் பெரும்பாபாலான சமயங்களில் இவர் பங்குபற்றி இருந்தார்.
  • ஒரு தடவை இராணுவத்தினரின் முரட்டுத்தனமான தாக்குதல்களிலிருந்து மீளும் பொருட்டு, போராளிகளைப் பின்வாங்கும் படி அறிவுறுத்தப்பட்ட பின்பும், இவர் தனியாக நின்று போராடி 70க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினரை அழித்தும், காயப்படுத்தியும் இருப்பிடம் திரும்பினார்.
  • காட்டு வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சமான உணவு உறையுள் என்ற மிகச் சிரமமான விடயங்களை மிக இலகுவாக கையாளத் தெரிந்த மதிநுட்பம் நிறைந்த போராளிகளில் இவர் முக்கியமானவர். போராளிகளுக்கான உணவுத் தேவைகளை இயற்கையுடன் ஒன்றிய வழிகளில் தேடிக் கண்டு பிடித்து தயார்ப்படுத்துவதில் திறமை பெற்றிருந்தார். அதற்காகவே தோழர்கள் இவரைத் தேடிப்பிடித்து அழைத்துச் செல்வது ஒரு வழமையான வேலையாக இருந்தது.
  • கையினால் இவர் ஆற்றும் பணிகள் கடுமையாக இருந்ததால் கை விரல்கள் இயங்க மறுத்த சுகவீன நிலைகளுக்கும் அவ்வப்போது ஆளாகி சிகிச்சை பெற்றிருந்தார்.
  • மோட்டார் வாகனம் எப்போதும் இவரின் பயணத் துணையாக இருந்தது.

முக்கிய தாக்குதல்கள்

  • இதயபூமி
  • ஆகாய கடல் வழிச்சமர்
  • ஆனையிறவுச்சமர்
  • மண்கிண்டி மணலாறு வெற்றிச்சமர் (1991)
  • பூநகரி 2வது சமர்
  • பூநகரி தவளைப் பாய்ச்சல் வெற்றிச் சமர் (1993, கார்த்திகை)

இறுதிச் சமர்

  • இறுதிச் சமரான பூநகரி தவளைப் பாய்ச்சல் சமருக்கு இவர் செல்ல விரும்பிய போது 'இப்ப அவசரப்பட வேண்டாம்' என்று விடுதலைப்புலிகளின் தலைவர் கூறினார். ஆனாலும் 'இல்லை நான் போகப்போகிறேன்² என்று பிடிவாதமாக நின்று விருப்பப்பட்டுச் சென்றார்.
  • பூநகரி தவளைப் பாய்ச்சல் என்ற பெயரில் நிகழ்ந்த முகாம் தாக்குதலில் முதல் அணியாக சென்று அதில் வீரமரணமடைந்தார்.

நவம்பர் 01 – வரலாற்றில் இன்று!

 நவம்பர் 01 – வரலாற்றில் இன்று!

1800 – வெள்ளை மாளிகைக்குக் குடியேறிய முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஜான் ஆடம்ஸ் பெற்றார்.
1954 – பாண்டிச்சேரி நிர்வாகம் பிரெஞ்சு அரசிடமிருந்து இந்திய அரசுக்கு மாற்றப்பட்டது.
1956 – இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபோது தமிழ் பேசும் மக்களுக்கு தனி மாநிலமாக ‘தமிழ் நாடு’ அமைந்தது.
1956 – குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்தது.
1970 – விடுதலைப் புலிப் போராளி கப்டன் மயூரன் பிறந்தார்.
2006 – பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.

Quelle - http://tamilsnow.com/?p=27731

இன்று... நவம்பர் 11

இன்று... நவம்பர் 11
◾1993 - தமிழீழ விடுதலைப் புலிப் போராளி கப்டன் மயூரன்(பி. 1970), கப்டன் ஈழமாறன்(பி. 1973) அவர்களின் நினைவு நாள்...

◾இறுதிச் சமரான பூநகரி தவளைப் பாய்ச்சல் சமருக்கு இவர்கள் செல்ல விரும்பிய போது 'இப்ப அவசரப்பட வேண்டாம்' என்று விடுதலைப்புலிகளின் தலைவர் கூறினார். ஆனாலும் 'இல்லை நாங்கள் போகப்போகிறோம் என்று பிடிவாதமாக நின்று விருப்பப்பட்டுச் சென்றனர். பூநகரி தவளைப் பாய்ச்சல் என்ற பெயரில் நிகழ்ந்த முகாம் தாக்குதலில் முதல் அணியாக சென்று அதில் வீரமரணமடைந்தார்கள்..

வீரவணக்கம்....!! 

கப்டன் மயூரன்


கப்டன் மயூரன்
தியாகராஜா பாலசபாபதி
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: மயூரன்
இயற்பெயர்: தியாகராஜா பாலசபாபதி
பால்: ஆண்
ஊர்: பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 01.11.1970
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: கிளிநொச்சி பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம்
மேலதிக விபரம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


Quelle - வீரவேங்கைகள்